ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில் திருக்கோவில்,
ராகு ஸ்தலம்

திருநாகேஸ்வரம் - 612 204

ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில் திருக்கோவில்,
ராகு ஸ்தலம்
சமீபத்திய செய்தி

Not Available.

Click Here

தல இருப்பிடம்

தல இருப்பிடம்

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு கிழக்கே 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் இராகுபாகவன் சிவபெருமானை பூசித்த திருத்தலமாகும். நாக அரசராகிய இராகு பூசித்தமையால்தான் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது. திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் இராகுபாகவன் தனது இருதேவியருடன் எழுந்தருளியுள்ளார். புராண வரலாற்றின்படி இத்தலத்தில் இராகுபாகவன் நாகநாதசுவாமியை வழிபட்டதோடு, இத்தலத்தில் தன்னையும் வழிபடுவோர்க்குப் பல நலன்களையும் அருளும் வரமும் பெற்றுத் திகழ்கின்றார்.


இராகுபாகவனின் அமைப்பு

இராகுபாகவனின் அமைப்பு

பொதுவாக இராகு, கேது கோள்கள் எப்படி ஏற்பட்டன என்பதை பண்டைய புராணங்கள் எடுத்தியம்புகின்றன. சோதிடமுறையில் பார்க்கும்போது இராகுபாகவானின் பெருமை அளவிடற்கரியதாகும். பூமியானது சிறிது நீண்ட வட்டகதியில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதே போன்று சந்திரனும் பூமியை இரு இடங்களில் சந்திக்கின்றது. சந்திரன் மேல்நோக்கிச் செல்லும்போது பூமியின் கதியில் குறிக்கிடும் இடம் இராகு எனவும் சந்திரன் கீழ்நோக்கி வரும்போது பூமியின் கதியில் குறுக்கிடும் இடம் கேது எனவும் பெயர் பெறும்.

தல இருப்பிடச் சிறப்பு

தல இருப்பிடச் சிறப்பு

"தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்றார் மாணிக்கவாசகப் பெருமான். தென்னாடு என்பதற்கு அவர் குறித்த பொருள் எதுவாயினும் நம் தென்னாடு சிவாலயங்கள் மிக்கது. வளமும் வாழ்வும் வற்றாது விளங்கிவரும் வண்டமிழ் சோழ நாட்டில் அமைத்த தேவரப்பதிகம் பெற்ற திருத்தலங்கள் 274 என்பர். அவற்றுள் காவிரிக்குத் தென்பால் அமைந்தவை 127 திருதலங்களாகும். அதிர்காணும் சிறப்புமிக்க திருத்தலங்களுள் திருநாகேஸ்வரம் 47-வது தலமாக அமைந்துள்ளது.

கோயில் விவரங்கள்

ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில் திருக்கோவில்,
ராகு ஸ்தலம்

திருநாகேஸ்வரம் - 612 204

+91- 435-2463354

விரைவு இணைப்புகள்

வரலாறு

திருவிழா

தொடர்பு இணைப்புகள்

தொடர்பு

Designed by AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,

Designed by

AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,